Writer / Story Teller
- Writer
- Storyteller
- Debate speaker.
- Stage speaker.
- Worked as a radio presenter (RJ).
- Served as an ambassador for Scan Foundation India for animal rights for three years.
- Worked as a teacher in a private school.
- Holds a black belt in Kung Fu, a martial art.
+91 99428 16606
sarithasanju08@gmail.com
About Me:
Education & Training
சி. சரிதா ஜோ
வசிப்பிடம் : ஈரோடு
படிப்பு : M.A., M.Ed., M.Sc (Psychology)
- எழுத்தாளர், கதைசொல்லி பட்டிமன்றப் பேச்சாளர், மேடைப் பேச்சாளர்.
- வானொலி பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் (RJ) பணியாற்றியவர்.
- ஸ்கேன் பவுண்டேஷன் இந்தியா விலங்குகள் உரிமை அமைப்பின் தூதுவராக மூன்று வருடங்கள் பணியாற்றியவர்.
- தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்புப் பட்டை பெற்றவர்.
வாழ்க்கை குறிப்பு :
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் பிறந்தவர். இவர் தந்தை K.C. சின்னச்சாமி. தாயார் C. கண்ணம்மாள். இவர் V.P. ஜோதிலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சஞ்சய் சச்சின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர் தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.
கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் நுழைந்த இவர் வாசிப்பதில் பேரார்வம் கொண்டவர்.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர். ஈரோடு மாவட்டத் துணைத் தலைவர்.
- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர்.
- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் இளம் தளிர் திட்டத்தில் இவருடைய சிறார் சிறுகதை வண்ணங்களின் அதிசயம் புத்தகமாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் வாசிப்பு இயக்கத்தில் வெளிவந்த நூலில் இவருடைய கிளியோடு பறந்த ரோகிணி கதை வெளிவந்துள்ளது.
மாநிலக் கருத்தாளராகவும் உள்ளார்.
திருநெல்வேலி உடுமலைப்பேட்டை பெருமாநல்லூர் திருச்செங்கோடு ஆகிய புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரையாற்றி உள்ளார்.
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சிறுவாணி இலக்கியத் திருவிழா வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டவர்.
தமிழகம் முழுவதும் இதுவரை அரசு தனியார் பள்ளி கல்லூரிகளிலும் பல்வேறு தனியார் அமைப்புகளிலும் 700க்கும் மேற்பட்ட கதை சொல்லல்களை நிகழ்த்தியுள்ளார்.
படைப்புகள் வெளிவந்த பத்திரிகைகள் :
- இந்து தமிழ் திசை மாயாபஜார், சுட்டி விகடன், பொம்மி, பெரியார் பிஞ்சு, தமிழருவி (இலங்கை), கனலி இணைய இதழ், கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ் மற்றும் சுவடு மின்னிதழ், வண்ணக்கதிர் ஆகியவற்றில் குழந்தைகளுக்கான இவருடைய கதைகள் வெளிவந்துள்ளது.
- செம்மலர் இதழில் சிறார் இலக்கியம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.
- இந்து தமிழ் திசை வெற்றிக்கொடி (மாணவர்களுக்கான இதழ்)நாளிதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நேர்காணல் வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் :
- தினமணி மகளிர் மணி, லேடிஸ் ஸ்பெஷல் பெண்கள் மாத இதழ், தினத்தந்தி தேவதை, ஆளுமை சிற்பி மாத இதழ், தங்க மங்கை மாத இதழ் மற்றும் விகடன் தீபாவளி மலர் இவற்றில் இவருடைய நேர்காணல்கள் வெளிவந்துள்ளது.
- ஜோஸ்டாக் YouTube, பாயாசம் YouTube, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மங்கையர் சோலை மற்றும் புதிய தலைமுறை, அவள் விகடன் யூடியூப் சேனல் ஆகியவற்றில் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
- ஹலோ எஃப்எம் சூரியன் எஃப் எம் புதுகை fm இவற்றில் இவருடைய நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
பிற செயல்பாடுகள் :
இதுவரை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் 50க்கும் மேற்பட்ட கதை சொல்லல் மற்றும் கதை எழுதுதல் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி இருகிறார்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களுக்கும் கதை சொல்லல் நிகழ்வை நடத்தி வருகிறார்.
இலக்கியப் பயணமாக கம்போடியா மற்றும் வியட்நாம் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கும் கதைசொல்லல் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.
Saritha Jo Storyteller என்ற பெயரில் YouTube சேனலில் குழந்தைகளுக்கான கதைகளைக் கூறி வருகிறார்.
கதை கதையாம் என்ற WhatsApp குழுவை உருவாக்கி கதை சொல்லி வருகிறார்.
கதை கதையாம் குழுவில் 3000 திற்கும் மேற்பட்டவர்கள் தினமும் கதைகளைக் கேட்டு வருகிறார்கள்.
வலைத்தமிழ் நிறுவனம் வழியாக இணையத்தில் வாரம் தோறும் வெளி நாட்டில் வாழும் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி வருகிறார்.
இலக்கியப் படைப்புகள்
சிறார் சிறுகதைத் தொகுப்புகள் :
- நீல மரமும் தங்க இறக்கைகளும்
- கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி
- கிளியோடு பறந்த ரோகிணி
- யார் தாத்தா நீங்க?
- வண்ணங்களின் அதிசயம் (தமிழ்நாடு பாடநூல் கழகம்)
- காட்டுக்குள் மர்ம விலங்கு
- சின்ன வாத்தியார்
- கதை கதையாம்
- போன்சாய் மரம்
சிறார் நாவல்கள்
- மந்திரக் கிலுகிலுப்பை
- நிழலைத் திருடிய பூதம்
- பேயாவது பிசாசாவது
- கடலுக்கடியில் மர்மம்
- சரசுவதி என்ன ஆச்சு?
- மாய உலகமும் மந்திரப் புத்தகமும்
- The Magical Rattle (English)
கட்டுரை
- சாவ்பாடி (பெண்ணியம்)
விருதுகள் :
- அசோகமித்திரன் நினைவு படடைப்பூக்க விருது 2021 (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை)
- திருப்பூர் சக்தி விருதுகள் 2022
- உலகத் தமிழ் பேரியக்கத்தின் தங்க மங்கை விருது 2022
- தனிஷ்க் புதுமைப்பெண் விருது 2022.
- ஈரோடு ஜே.சி.ஐ வழங்கிய சிறந்த சிறார் எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி விருது 2021
- கருப்பு கருணா விருது 2022 (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை)
மந்திரக் கிலுகிலுப்பை நூல் பெற்ற விருதுகள் :
- உலகளாவிய நிலையில் ஒரு துளிக் கவிதை அமைப்பு மற்றும் வல்லின சிறகுகள் இணைந்து நடத்திய போட்டியில் மந்திரக் கிலுகிலுப்பை சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றுள்ளது. 2021
- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 இல் சிறந்த சிறுவர் நாவலுக்கான விருதை மந்திரக் கிலுகிலுப்பை பெற்றுள்ளது.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் வழங்கிய ராஜபாளையம் மணிமேகலை மன்றம் கோ.மா.கோதண்டம் விருது மந்திரக் கிலுகிலுப்பை பெற்றுள்ளது. 2023
- ஆங்கிலத்தில் The Magical Rattle என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- பிரெஞ்சு பிலிபினோ அரேபி மராட்டி மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் மொழி பெயர்க்க தமிழக அரசால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் மர்மம் நூல் பெற்ற விருதுகள் :
- S.R.M பல்கலைக்கழகம் வழங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருது சிறார் இலக்கியத்திற்காக அழ.வள்ளியப்பா விருது 2023
- வாசகசாலை வழங்கிய சிறந்த சிறார் குழுக்கான விருதை கடலுக்கு அடியில் மர்மம் பெற்றுள்ளது. 2022
- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து வழங்கிய சிறந்த சிறார் நூலுக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருதை கடலுக்கு அடியில் மர்மம் நூல் பெற்றுள்ளது. 2023
- மணப்பாறை சௌமா அமைப்பு வழங்கிய சிறந்த சிறார் நூலுக்கான சௌமா விருது 2022.
- தமிழ்ப் பல்லவி , பாவலர் மலரடியான் – செந்தமிழ் ராஜா சிறந்த சிறு நூலுக்கான விருது 2023
சரசுவதிக்கு என்ன ஆச்சு? நூல் பெற்ற விருதுகள் :
- கம்பம் தமிழ் இலக்கியப் பேரவையின் சிறந்த சிறுவர் நூலுக்கான விருது 2023
- பொதிகை மின்னல் இலக்கிய அமைப்பு சிறந்த நூலுக்கான விருது 2023
- கவிதை உறவு இலக்கிய அமைப்பு சிறந்த நூலுக்கான விருது 2023
Place : Erode
Education : M.A., M.Ed., M.Sc (Psychology)
Born in Vijayamangalam, Erode district. Her father is K.C. Chinnasami and her mother is C. Kannammal. She married V.P. Jothilingam and they have two sons, Sanjay and Sachin, who are both studying.
She holds master’s degrees in Tamil and Psychology, and a diploma in Education.
Literary Contributions:
Entered Tamil literature as a storyteller and has a great passion for reading.
– State committee member of the Tamil Nadu Progressive Writers and Artists Association and vice president of the Erode district.
– Erode district secretary of the Tamil Nadu Children’s Writers and Artists Association.
– Secretary of the Tamil Nadu Children’s Writers and Artists Association, Erode district.
Publications:
Her children’s story “Vannankalin Athisayam” was published as a book in the Tamil Nadu Textbook Corporation’s Young Buds project.
Her story “Kiliyodu Parantha Rohini” was published in the Tamil Nadu government’s reading campaign book.
Media Appearances:
– Special guest at book fairs in Tirunelveli, Udumalpet, Perumanallur, and Tiruchengode
– Participated as a special speaker in the Tamil Nadu government’s Siruvani Literature Festival in Coimbatore.
– Conducted over 700 storytelling sessions across various schools, colleges, and private organizations in Tamil Nadu.
Published in:
– Hindu Tamil Thisai Maayabazaar, Chutti Vikatan, Bommi, Periyar Pinju, Tamilaruvi (Sri Lanka), Kanali website, Suvadu e-magazine, Vannakadhir.
– Articles on children’s literature in Semmalar magazine.
– Continues to write a series of articles for Hindu Tamil Thisai’s Victory Banner (student magazine).
Interviews Published in:
– Dinamani Malar Magalir Mani, Ladies Special Women’s Monthly, Dinathanthi Devathai, Aalumai Sirpi Monthly, Thanga Mangai Monthly, and Vikatan Diwali Malar.
– Featured on YouTube channels JoStack, Payasam, and Doordarshan television’s Mangaiyar Cholai and Puthiya Thalaimurai.
– Interviews published on Aval Vikatan YouTube channel.
– Interviews aired on Hello FM, Suryan FM, and Puducherry FM.
Other Activities:
– Conducted over 50 storytelling and story-writing workshops for teachers, parents, and children.
– Organizes storytelling events for pregnant women and the elderly.
– Conducted storytelling sessions for children in Cambodia and Vietnam during her literary journey.
– Runs a YouTube channel “Saritha Jo Storyteller” dedicated to children’s stories.
– Created a WhatsApp group “Kadhai Kadhayaam” for storytelling with over 3000 daily listeners.
– Weekly online storytelling sessions for children living abroad through Valaithamizh organization.
Literary Works:
Children’s Short Story Collections:
- Neela Maramum Thanga Irakkangalum
- KanavukkuL Oru Kannaamoochi
- Kiliodu Parandha Rohini
- Yaar Thaatha Neenga?
- Vannangalin Adhisayam (Tamil Nadu Textbook Corporation)
- Kaattukkul Marma Vilangu
- Chinna Vaathiyar
- Kadhai Kadhayaam
- Bonsai Maram
Children’s Novels:
- Mandhira Kilukiluppai
- Nizhalai Thirudiya Bootham
- Peyavadhu Pisasavadhu
- Kadalukku Adiyil Marmam
- Sarasuvathi Enna Aachu?
- Maaya Ulagamum Mandhira Puthagamum
- The Magical Rattle (English)
Essays:
- Saavpaadi (Feminism)
Awards:
– Ashokamitran Memorial Creativity Award 2021 (Tamil Nadu Arts and Literary Stage)
– Tiruppur Sakthi Awards 2022
– Thangamangai Award 2022 from World Tamil Periyakkam
– Tanishq Pudhumaippen Award 2022
– Best Children’s Writer and Storyteller Award 2021 from Erode JCI
– Karuppu Karuna Award 2022 (Tamil Nadu Arts and Literary Stage)
Awards for “Mandhira Kilukiluppai”:
– Best Novel Award from the Global Association of a Drop of Poetry and Vallinam Wings, 2021.
– Best Children’s Novel Award at the Pudukottai Book Fair 2022.
– Koma Kothandam Award from Rajapalayam Manimegalai Mandram of the Tamil Nadu Progressive Writers and Artists Association, 2023.
– Translated into English as “The Magical Rattle”.
– Tamil Nadu government’s MoU for translation into French, Filipino, Arabic, Marathi, and Hindi.
Awards for “Kadalukku Adiyil Marmam”:
– Tamil Peraya Award for Children’s Literature from S.R.M. University, 2023.
– Al. Valliappa Award 2023.
– Best Children’s Book Award from Vasagasalai, 2022.
– Thavathiru Kundrakudi Adigalar Award from Tamil Nadu Arts and Literary Forum and New Century Book House, 2023.
– Souma Award for Best Children’s Book from Manapparai Souma Organization, 2022.
– Tamil Pallavi, Pavalar Malaraadiyaan, Senthamizh Raja Award for Best Short Book, 2023.
Award for “Sarasuvathi Enna Aachu?”:
– Best Children’s Book Award from Kambam Tamil Literary Association, 2023.
– Best Book Award from Pothigai Minnal Literary Organization, 2023.
– Best Book Award from Kavidhai Uravu Literary Organization, 2023.