Description
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ, உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார். ‘ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா’ விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
“இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது, உலகையே ஒரு மந்திரக் கம்பனத்தில் பறந்துபோய்ப் பார்த்துவிட்டு வந்த உணர்வு வருகிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் வாசிக்கும் அளவிற்கு எளிய நடையில் இருப்பது கூடுதல் சிறப்பு.”
– இரா. நாறும்பூநாதன், எழுத்தாளர்
“’மந்திரக் கிலுகிலுப்பை ‘ கதையை எழுதியிருக்கும் சரிதா ஜோ, ஆரோக்கியமான கதை சொல்லியாகத் திகழ்கிறார். இக்கதை சிறுவர்கள் மனதில் இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சொல்லப்பட்ட விதமும் கற்பனையும் கதைக்கருவும் குழந்தைகளுக்கு ஏற்றவையாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.”
–த. ஸ்டாலின் குணசேகரன் மக்கள் சிந்தனைப் பேரவை
Reviews
There are no reviews yet.